திருச்சி இட மலைப்பட்டி கிராமம் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் பிரான்சிஸ் இவரது மகன் இம்மானுவேல் (37). இவர் கடந்த 17ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் அருகே உள்ள பிள்ளைவிளை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து
தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே ஒரு உணவகம் முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் இவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

