தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதமான thoothukudi.nic.in என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி மற்றும் சேவை சான்றுகளின் நகல்களுடன் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101,
தூத்துக்குடி மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்து அரசு வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாகப் பெறப்படும். விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள் 16.10.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணி வரை ஆகும் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

