தூத்துக்குடி கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (எண் 229) சார்பில், வெள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள அதிசய மாதா கோயில் கடற்கரைச் சாலையோரம் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் இளங்குமரன், தலைமை வகித்து பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் கல்லூரியின் 25 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சுமார் 1,000 பனை விதைகளைச் சாலையோரங்களில் நட்டனர். கல்லூரி முதல்வரின் ஆலோசனையின்பேரில், நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த்துறைத் தலைவரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான செல்லக்கனி மற்றும் உடற்கல்வி இயக்குநர் தவமணி மனோஷ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

