தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடப் பொதுமக்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடையில் தீபாவளிச் சிறப்பு விற்பனை களைகட்டியுள்ளது.

தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல், சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளைகளைக் கொண்டு 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கே.சின்னத்துரை அன் கோ ஜவுளி நிறுவனத்தில், தீபாவளியை முன்னிட்டுப் புதிய டிசைன்களிலான ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கான பட்டுப்புடவைகள், காட்டன் சேலைகள், சுடிதார் மற்றும் லெஹங்கா ரகங்களும்; ஆண்களுக்கான வேட்டி, சட்டை, கோட்-சூட், ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் வகைகளும்; குழந்தைகளுக்கான பார்ட்டி வேர், பட்டுப்பாவாடை, பிராக் உள்ளிட்ட ஆடைகளும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அணிவகுத்து நிற்கின்றன.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரக் காலமே எஞ்சியுள்ள நிலையில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து ஆடைகளை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர். இதனால் கடை வளாகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைக்கவும் கடை நிர்வாகம் சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் வசதிக்காகக் குடிநீர், அமர்ந்து செல்ல இருக்கை வசதிகள் மற்றும் வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்த பரந்த பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

KCDiwali.jpg

அதேபோல், தீபாவளிப் பண்டிகை மற்றும் ஐப்பசி சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, சின்னத்துரை கோல்டு ஹவுஸிலும் புதிய டிசைன்களிலான தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

சிறப்பு விற்பனைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடை உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, அரி.ராமகிருஷ்ணன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.