உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று (நவம்பர் 2ம் தேதி) கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் ஜார்ஜ் சாலையில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபைக்கான கல்லறை தோட்டத்தில் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்மாலை அணிவித்தும், மெழுவர்த்தி ஏற்றியும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில், கல்லறை திருநாளை முன்னிட்டு மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று (நவம்பர் 2ம் தேதி) கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று (நவ.2) மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக 272 விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

