தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காக்காச்சி அம்மன் கோவில் தெரு, நடராஜபுரம் 6-ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சுந்தரபாண்டியன் (31). இவர் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை அவதூறாகப் பேசித் தாக்கியுள்ளார்.

மேலும் அந்த இளம்பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுந்தரபாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.