தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா தெற்கு மயிலோடை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தேவபிரகாசம் (வயது 40). இவர் சம்பவத்தன்று தனது டிவிஎஸ் ஸ்போர்ட் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி - திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ராஜாபுதுக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, திருநெல்வேலி நோக்கிச் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தேவபிரகாசத்தை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டுத் தீவிர சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (நவம்பர் 1) சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கயத்தார் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.