தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமையா (75). இவரது மகள் முத்துலட்சுமி (40) மேல வெள்ளமட பகுதியில் வசித்து வரும் நிலையில், ராமையா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இவரது பூட்டிய வீட்டிலிருந்து பலத்த துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகச் செய்துகணம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார், வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ராமையா கட்டிலில் இருந்து தவறி விழுந்த நிலையில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. அவர் உயிரிழந்து சுமார் இரண்டு நாட்கள் இருக்கும் எனப் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையொடுத்து முதியவர் ராமையாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.