தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மாதவன் (வயது 23). இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், மாதவன் தனது அத்தை மாரியம்மன் வீட்டில் தங்கி கேட்டரிங் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாதவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு கடும் மதுபோதையில் இருந்த மாதவன், வீட்டின் அருகே உள்ள ஆஸ்பெஸ்டாஸ் அறைக்குச் சென்று தூக்குமாட்டிக் கொண்டார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாகக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாதவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.