தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் -1, பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் பெத்தையா (50). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு 4-வது யூனிட்டில் பணிபுரிவதற்காக அவர் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் வருவதாகக் கூறி அவர் கீழே சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் துறைமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர் துறைமுக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

