டிரஸ்ட் சாந்திவனம் ஆண்டுதோறும் கல்வி, சமூக சேவை மற்றும் மருத்துவ சேவையை பாராட்டும் வகையில் முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது. இந்தாண்டு விழா திருச்சி - தஞ்சை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு டிரஸ்ட் சாந்திவனம் நிறுவனர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மூத்த பத்திரிக்கையாளர் எம்.ராமகிருஷ்ணன், சமூக ஆர்வலர் சோனியா மல்ஹர், மக்கள் மருத்துவர் டாக்டர் கலையரசன், டாக்டர் ராமகிருஷ்ணன், தோழர் அரசப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் பேசிய தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பத்திரிக்கையாளர்கள் சமூகத்தின் நான்காவது தூண் என்றும், சாந்திவனம் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் சமூகத்திற்கு ஆற்றி வரும் சேவை பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
மேலும், பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் தோழர் யோகா விஜயகுமார், திருச்சி பழனிசாமி, தஞ்சாவூர் சுரேஷ் உட்பட பல மாவட்ட நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
விழாவில் சமூக சேவையில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் சாந்திவனம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

