தருவைகுளம் பங்குத்தந்தை மணி அந்தோணி, தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜன், கடலோர பாதுகாப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, கடல்சார் சட்ட அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ரமேஷ் மோகன் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் மேரி வெஸ்னா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தருவைகுளம் மீனவர் சங்கத் தலைவர்கள், தருவைகுளம் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரவி காந்த், தருவைகுளம் பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கடலோரப் பாதுகாப்பு மற்றும் மீனவர்கள்-காவல்துறை இடையேயான பரஸ்பர உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து, மீனவர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே நல்லிணக்கக் கையுந்துப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணியினருக்குச் சிறப்பான பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.