தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின்னர் சத்யபாமா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் கடந்த தேர்தலில் ரூ.31 கோடி செலவு செய்ததாக கூறும் வகையில் வைரல் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்து கூறுகையில், “நான் அந்த மாதிரி எல்லாம் பேசவில்லை. அந்த வீடியோவில் இருப்பது அனைத்துமே சித்தரிக்கப்பட்டது. இந்தக் காணொலியை பரப்பியது யார் என்று தெரியவில்லை.

எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வீடியோக்களை பரப்புகிறார்கள். இந்த வீடியோ தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்காது. மக்கள் தெளிவாக உள்ளனர். இந்த வீடியோ குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும். தாராபுரம் தொகுதியில் நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.