தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யக் கட்சியினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆச்சியூர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி, 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இப்பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் திராவிட மாடல் அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை எடுத்துக்கூறி திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி பகுதிச் செயலாளர் டி.ஏ.ரவீந்திரன், ஜெயக்குமார், வட்டச் செயலாளர் தங்கராஜ், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், வட்டச் செயலாளர் பாலு மற்றும் வட்டப் பிரதிநிதி தேவேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

