தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் மாடசாமி (21) பகுதியைச் சேர்ந்த இளைஞர் 17 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்துச் சிறுமியின் தரப்பில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாடசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.