தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் நூலகக் குழு, 'ரீடர்ஸ் கிளப்' மற்றும் புத்தக வாசிப்பு மன்றம் சார்பில் "வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு வரப்பிரசாதமா? அச்சுறுத்தலா?" என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சிபானா தலைமை தாங்கி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சாத்தூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். காமராஜ் பட்டிமன்றத்தின் நடுவராகப் பொறுப்பேற்றுத் தலைமை வகித்தார்.

இக்கருத்தரங்கில் மாணவிகள் இரு அணிகளாகப் பிரிந்து, செயற்கை நுண்ணறிவின் நன்மைகள் மற்றும் சவால்கள் குறித்துத் தங்களது கருத்துகளை முன்வைத்துப் பேசினர். நிகழ்வின் இறுதியில் பட்டிமன்றத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

புத்தக வாசிப்பு மன்றத்தின் சார்பில் எழுத்தாளர் மாரிமுத்து மற்றும் லாரன்ஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நூலகர் வினிதா செய்திருந்தார்.