திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தியாகி வே.இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு 11.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நினைவஞ்சலி நடைபெற உள்ளதால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் அமைதியான முறையில் நினைவஞ்சலி செலுத்தும் பொருட்டு தாழையூத்து, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, வீரவநல்லூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் 1)
தோராயமாக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 50 மீட்டர் தொலைவிலுள்ள தாழையூத்து மதுபானக் கடை எண்.10734, 2) ரயில்வே கேட், நாங்குநேரி மதுபான கடை எண்.10631, 3) அம்பலம், மூலைக்கரைப்பட்டி மதுபானக் கடை எண்.10640 4) கிள்ளிகுளம் மெயின்ரோடு, வீரவநல்லூர் மதுபானக் கடை எண்.10655, 5) உப்பாது காலனி, வீரவநல்லூர் மதுபானக் கடை எண்.10622, 6) சேரன்மகாதேவி to பத்தமடை மெயின்ரோடு, சேரன்மகாதேவி மதுபான கடை எண்.10615 ஆகியவை அனைத்தும் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

