தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்திற்குட்பட்ட குலையன்கரிசல், போடம்மாள்புரம், இருவப்புரம், செபத்தையாபுரம், நட்டாத்தி, பெருங்குளம், அப்பன் கோவில் மேலமங்கலக்குறிச்சி, சிறுதொண்டநல்லூர், கொற்கை, முக்காணி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி மாவட்டம் கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட நீர்வளத்துறை சார்பில் தாமிரபரணி ஆற்றிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வடகால் வழியாக ஏரல் வட்டத்திற்குட்பட்ட பெட்டைகுளம், பேய் குளம், பெருங்குளம். அப்பன் கோவில் கிராமத்திலுள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகை இடது கரை, மங்கலக்குறிச்சி,
குரங்கனி தடுப்பணை போன்ற நீர்வழி தடங்களை பார்வையிட்டு மழை காலங்கள் வரும்முன் நீர்வழி தடங்களில் உள்ள பணிகளை சீரமைத்து கரைகளை வலுப்படுத்துதல், மதகுகளை சரிசெய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ஏரல் வட்டம் சாயர்புரம் பேரூராட்சிக்குட்பட்ட சாயர்புரம் மற்றும் பெருங்குளம் பேரூராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டு, அனைத்து பேரூராட்சி வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.
பின்னர் நட்டாத்தி கிராமத்தில் உள்ள நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுத்தொண்டநல்லூர் ஊராட்சி மணலூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாநில பேரிடர் நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.7.35 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு மையத்திற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும்,
கொற்கை அகழாய்வு விளக்கக் கூடத்தின் செயல்பாடுகளையும், கொற்கை ஊராட்சி மணலூர் கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்தும், முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளத் தடுப்பு நிவாரண முகாமின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஹரிகரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், செயற்பொறியாளர், நீ.வ.து, கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டம் தங்கராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இளஞ்சேரன், ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

