தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் சுழற்சி முறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நடைபெற்ற மின்மோட்டார் சரிபார்க்கும் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் இணைப்புப் பணிகளும் நேரில் பார்வையிடப்பட்டன.
ஆய்வின் போது பேசிய ஜெகன் பெரியசாமி, மக்கள் நலத் திட்டங்கள் பாரபட்சமின்றி அனைத்துப் பகுதி மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் பணிகள் திட்டமிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பணிகள் நடைபெறும் இடங்களில் தவறுகள் ஏதும் நேராத வண்ணம் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், பகுதிதோறும் பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க 35 நீர்த்தேக்கத் தொட்டிகளும் கண்காணிக்கப்பட்டு விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
ஆய்வின் போது மாநரகாட்சி பணிக்குழு தலைவா் கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், மாவட்ட மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, சுற்றுச்சூழல் அணி பொன்ராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

