தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட 110/22KV சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (செப்.9) புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணி நகர், 3-வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, ஈபி காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புக் குடியிருப்புகள், ராஜகோபால் நகர்,

பத்திநாதபுரம், சங்கர் காலனி, எஃப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜ ரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, டிஎம்பி காலனி,

அண்ணா நகர் 2-வது மற்றும் 3-வது தெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், புஷ்பா நகர், கல்லூரி நகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோகச் செயற்பொறியாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.