தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் மேல வைப்பாறைச் சேர்ந்த பெருமாள் சாமி மகன் குருசாமி (38). தூத்துக்குடி சோட்டையன் தோப்பு குமரன் நகரைச் சேர்ந்த மல்லுச்சாமி மகன் ஆறுமுகம் சாமி (38). இவர்கள் இருவரும் இருக்கன்குடியிலிருந்து எட்டயபுரம் சாலை வழியாக விளாத்திகுளம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

விளாத்திகுளம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியில் பைக் பலமாக மோதியது. இந்த விபத்தில், வாகனத்தை ஓட்டிச் சென்ற குருசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த ஆறுமுகம் சாமி பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து விளாத்திகுளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.