தூத்துக்குடி எஸ்.எஸ். தெருவில் உள்ள காய்கறி மற்றும் பொருட்கள் விற்பனை சந்தைக்குப் பெண் ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காகத் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு வாகனத்தின் இருக்கையைத் திறந்து பார்க்கையில், இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று சுருண்டு படுத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அப்பெண் அருகில் இருந்த கடைக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அங்கு திரண்ட பகுதியினர், இருசக்கர வாகனத்தின் இருக்கைக்குள் மறைந்திருந்த பாம்பை மீட்டு அடித்தனர். சந்தைப் பகுதியில் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்த இந்தச் சம்பவத்தால் எஸ்.எஸ். தெரு மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.