சீனாவில் நடைபெறும் இந்தப் புகழ்பெற்ற போட்டியின் வரலாற்றிலேயே, சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜெங் 7-5, 6-4 என்ற நேர் செட்களில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவை 1 மணி நேரம் 43 நிமிடங்களில் வீழ்த்தி அசத்தினார்.
1000 புள்ளிகள் கொண்ட WTA தொடர்களில் முதல்முறையாகச் சாம்பியனாகியிருக்கும் கின்வென் ஜெங், ஒட்டுமொத்தமாகத் தனது 6-ஆவது கேரியர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். உலகத் தரவரிசையில் 54-ஆம் இடத்தில் உள்ள ஜெங், 5-ஆம் இடத்தில் இருக்கும் ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இப்பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற ஜெங்குக்கு வெற்றிக் கோப்பையுடன் 1000 தரவரிசைப் புள்ளிகளும், ரூ.11.14 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இரட்டையர் பிரிவு:
மகளிர் இரட்டையர் பிரிவில், தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருந்த கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி - பிரேசிலின் லூசியா ஸ்டெஃபானி ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் முதலிடத்தில் இருந்த சீனாவின் ஜாங் ஷுவாய் - செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

