தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழவல்லான் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையில் காவல் துறையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஏரல் சிவகளை பகுதியைச் சேர்ந்த வத்திராப்பு (49) மற்றும் செபத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஆலோசனை பிரிட்டன் (38) ஆகிய இருவரையும் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி வழக்குப் பதிவு செய்து, கைதான இருவரிடமிருந்தும் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 698 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தார்.

