எனவே, இம்மாதம் முதல் பயனாளிகளுக்கான நிதியுதவி, அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படும். அரசின் ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் அனைத்து பயனாளிகளுக்கும் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவி பெறும் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இதுவரை இணைக்கப்படாமல் இருப்பின், தங்களது வங்கி கிளையை அணுகி ஆதார் இணைப்பு பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி.) பிரிவு மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள சமூக பாதுகாப்புத்திட்ட பிரிவில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை பயனாளிகள் அணுகலாம்.
அங்கு தேவையான வழிகாட்டுதலும் உதவியும் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் நிதியுதவி எவ்வித இடையூறும் இன்றி சீராக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

