தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27 ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து பாதுகாப்பு பெறப் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27-ஆம் ஆண்டு ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கேட்டுக்கொண்டுள்ளார்.
அறிவிக்கப்பட்ட பயிர்களும் கடைசித் தேதிகளும்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வட்டாரங்களில் பயிரிடப்படும் பயிர்களுக்குக் கீழ்க்கண்ட இறுதி நாளுக்குள் காப்பீடு செய்ய வேண்டும்:
பாசி மற்றும் உளுந்து: 30.11.2026
மக்காச்சோளம் மற்றும் பருத்தி: 15.12.2026
சோளம் மற்றும் நிலக்கடலை: 16.12.2026
கம்பு, எள் மற்றும் சூரியகாந்தி: 30.12.2026
நெல் III (நவரை): 01.02.2027
பிரிமியத் தொகை விவரம் (ஏக்கருக்கு):
விவசாயிகள் தங்களது பயிர்களுக்குரிய காப்பீட்டுப் பிரிமியத் தொகையைத் செலுத்த வேண்டிய விவரம்:
உளுந்து: ரூ.252/-
பாசி பயறு: ரூ.209/-
மக்காச்சோளம்: ரூ.314/-
பருத்தி: ரூ.392/-
சோளம்: ரூ.165/-
நிலக்கடலை: ரூ.161/-
கம்பு: ரூ.147/-
எள்: ரூ.136/-
சூரியகாந்தி: ரூ.173/-
நெல் III (நவரை): ரூ.559/-
காப்பீடு செய்வது எப்படி & தேவையான ஆவணங்கள்:
விவசாயிகள் தங்களது அருகிலுள்ள பொதுசேவை மையங்கள் (CSC), தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும், அல்லது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட இணையதளம் வழியாக நேரடியாகவும் பிரிமியத் தொகையைச் செலுத்திப் பதிவு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்:
[Aadhaar Redacted] (நகல்)
வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல்
கணினி சிட்டா
நடப்பு பருவ அடங்கல்
முன்மொழிவு படிவம்
இந்தத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வறட்சி, வெள்ளம், புயல், ஆலங்கட்டி மழை உள்ளிட்ட தவிர்க்க முடியாத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்குக் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படும். எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே தங்களது சாகுபடி விவரங்களைப் பயிர்வாரியாக அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் பதிவு செய்து பயிர்க்காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

