பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்பின் போது, இந்திய கலாச்சாரத்தையும் தமிழின் பெருமையையும் பறைசாற்றும் வகையில், தமிழ் மறை நூலான 'திருக்குறள்' புத்தகத்தைப் பரிசாக வழங்கி அதிபர் விளாடிமிர் புதினைப் பிரதமர் மோடி வரவேற்றார். இந்த நிகழ்வு சர்வதேச தூதரக வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது இந்தியா - ரஷ்யா இடையே உள்ள நீண்டகால நட்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழல்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

