தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்தது முதல், அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இச் சோதனைகளின் போது கணக்கில் வராத கோடிக்கணக்கிலான லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதுடன், லஞ்சத்தில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாகவும் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், பத்திரப்பதிவுத் துறையில் இன்று ஒரே நாளில் 158 சார்பதிவாளர்கள் (Sub-Registrars) அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவுத் துறையின் வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை அதிகமான சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.