தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் கூலித் தொழிலாளி கார்த்திக் குமார் (30). இவர் தனது நண்பருடன் வடக்கு திட்டங்குளம் கலையரங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை அன்று பைக்குடன் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சரவணப்பாண்டி என்பவர், கார்த்திக் குமாரிடம் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். மேலும், ஆத்திரத்தில் அவரது பைக்கைச் சேதப்படுத்தியுள்ளாராம். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணப்பாண்டியைக் நேற்று கைது செய்தனர்.