தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் புது நகரைச் சேர்ந்தவர் விநாயகர் மகன் பொன்மாரீஸ் (26). இவர் தனது தாயாரிடம் பைக் வாங்கித் தரும்படி கேட்டாராம். அதற்கு தாயார் தற்போது பண வசதி இல்லை பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறினாரா

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பொன்மாரீஸ் கலைக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தாராம். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.