திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (60). இவர் கோவில்பட்டி - கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, கயத்தாறு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்து கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் காவல் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

