தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடலோரக் கிராமத்தில் “நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு” பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடலோரக் கிராமத்தில் “பாரம்பாரிய மீன்பிடிப்பில் நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம்” என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குளச்சல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விர்ஜில் க்ராஸ் தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளர் செபஸ்டின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் ச.மாரியப்பன் வரவேற்புரை வழங்கினார்.

திட்டத்தின் முதன்மை ஆராயச்சியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் ரவிக்குமார், நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு முறையின் முக்கியத்துவத்தை மீனவர்களிடையே எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன்பிடித் தொழிலாளர் சங்க தலைவர்ஆ. புஸ்பராஜ் கலந்து கொணடு வாழ்த்துரை வழங்கினார்.

முதுநிலை ஆராய்ச்சியாளர் தமிழ்ச்செல்வன் நன்றியுரை வழங்கினார். ஜானஸன் மற்றும் பி. மரிய அந்தோணி சுதாகர் தள உதவியாளர்கள் நவீன ஓடுகயிறு மீன்பிடிப்பு முறையை இயக்கும் முறை பற்றிய ஜயங்களுக்கு பதிலளித்தனர். முதுநிலை ஆராய்ச்சி மாணவர் ந.கோபாலகிருஸ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த 20 மீனவர்கள் கலந்து கொண்டனர்.