தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் செல்வன். ரமணா, 95 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் இந்துமதி மாணவர் ரமணாவுக்குச் சிறப்புப் பரிசு வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாணவரின் விடாமுயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை மற்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது எனப் பள்ளி நிர்வாகம் பாராட்டியுள்ளது.

தங்கப் பதக்கம் வென்ற மாணவர் ரமணாவுக்குப் பள்ளி நிர்வாகம், பொறுப்பு முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.