மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) மூலம் நிரப்பப்பட உள்ள பணியிடங்களின் விவரங்கள்:
பதவிகள்: லோயர் டிவிஷன் கிளர்க் (LDC) / ஜூனியர் செக்ரட்டேரியேட் அசிஸ்டண்ட் (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு 'ஏ'.
மொத்த காலியிடங்கள்: 2,536
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் (02.08.1999-க்கு முன்பாகவோ அல்லது 01.08.2008-க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது). அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம்: பணி மற்றும் தர நிலைக்கு ஏற்ப மாதத்திற்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: கணினி வழியிலான இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு (Tier-1 & Tier-2 CBT), திறனறித் தேர்வு (Skill Test) மற்றும் தட்டச்சுத் தேர்வு (Typing Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற 07.10.2026-க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண https://ssc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

