மக்கள் தொகை இரண்டாம் கணக்கெடுப்பு பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என கணக்கெடுப்பு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (13.10.2026), மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 தொடர்பாக, மாவட்ட மற்றும் பொறுப்பு நிலை அலுவலர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவியாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டாம் கட்டப் பணிகள் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) தொடர்பான பயிற்சி வகுப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
மேலும், 15.10.2026 மற்றும் 16.10.2026 ஆகிய இரு நாட்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இரண்டாம் கட்டப் பணிகளின் போது செய்ய வேண்டிய செயல்முறை குறித்து சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரால் பயிற்சிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியினை சிறந்த முறையில் மேற்கொண்டு மக்கள் தொகை இரண்டாம் கணக்கெடுப்பு பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, சார் ஆட்சியர்கள் ஹிமான்ஷு மங்கள், (கோவில்பட்டி), விவேக் யாதவ், (தூத்துக்குடி), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், உட்கோட்ட பொறுப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

