திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே புகழ்பெற்ற மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுத் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், எதிர்பாராத அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளனர். இருப்பினும், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தூரத்தில் இருந்து அருவியின் அழகு மற்றும் இயற்கைச் சூழலை அமைதியாகப் பார்த்து ரசிப்பதற்கு மட்டும் வனத்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.