தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (25.09.2026), நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மூன்று சக்கர வாகனம், வீல் சேர், ஊன்றுகோல், காதொலிகருவி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் 136 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
தொடர்ந்து, 01 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.1988/- மதிப்பீட்டிலான ஊன்றுகோலினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

