தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி ஆதித்தனார் காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ராஜேஷ் (53). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி கடந்த 9ஆம் தேதி பணம் எடுப்பதற்காக பீரோவைத் திறந்தபோது, அதிலிருந்த நகைப்பெட்டியைக் காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்தப் பெட்டியில் சுமார் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துக்குமார் ராஜேஷ் திருச்செந்தூர் வட்ட போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

