உள்ளூர் செய்தி

தூத்துக்குடி சிவன் கோவிலில் 19-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா: ஆகஸ்ட் 30-ல் நடைபெறுகிறது!

காலை 9.30 மணிக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம், காலை 11.30 மணிக்கு பஞ்சமுகார்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 7.30 மணிக்கு வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்கார தீபாராதனை, 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் டெய்கின் ஏசி ஷோரூம்: மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!

உலகின் முன்னணி ஜப்பானியத் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனிங் பிராண்டான 'டெய்கின்' நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம், ஹரிஷ் ரெஃப்ரிஜிரேஷன் மூலம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ந.வினோத் குமார் மறைவு: கனிமொழி எம்.பி. இரங்கல்!

தமிழரசு இதழில் வெளிவந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிந்தனைகளையும் சாதனைகளையும் முக்கிய நூலாகத் தொகுத்தவர் ந.வினோத் குமார்.

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் முன்னிலை வகித்தார்.

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

சாலையோர ஆக்கிரமிப்புகள், தற்காலிகத் தடுப்புகள், பதாகைகள் மற்றும் மின்கம்பங்களில் விதிமுறைகளுக்கு முரணாகத் தொங்கவிடப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: கடலோரக் காவல் படையினர் விசாரணை!

தூத்துக்குடி புதிய துறைமுக முகத்துவாரத்திற்குச் சற்று தெற்கே கடலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை திருட்டு - மர்ம நபர் கைவரிசை

நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த 4 லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகையைத் திருடிச் சென்றுள்ளார்.

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேபாள வெள்ளப் பேரழிவு: தூத்துக்குடி புனித லசால் பள்ளியில் மாணவர்கள் மெளன அஞ்சலி!

நேபாள அரசு அறிவிப்பின்படி 650-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் மாற்றம் : நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு!

தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் அ. ஜஹாங்கீர் பாஷா கோவில்பட்டி நகராட்சி ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு வகிக்க நியமித்து கடந்த 14.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிர்வாக நலன் கருதி தற்போது ரத்து செய்யப்படுகிறது.

அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பு - தூத்துக்குடியில் பரபரப்பு

அலுவலகத்தில் புகுந்த சுருட்டை விரியன் பாம்பைத் தீயணைப்புப் பணியாளர்கள் பாதுகாப்பாகப் பிடித்து, பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.