தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடலில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து கடலோரக் காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய துறைமுக முகத்துவாரத்திற்குச் சற்று தெற்கே கடலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற மீனவர் காலனி கடலோரக் காவல் நிலையப் போலீசார், கடலில் மிதந்த சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த நபரின் பெயர், ஊர் மற்றும் வயது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கடலோரக் காவல் நிலையப் போலீசார், உயிரிழந்தவர் யார் மற்றும் அவர் எவ்வாறு கடலில் விழுந்தார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

