பொதுமக்கள் முன்னிலையில் ஜெபமாலை வழிபாட்டுடன், வண்ணமயமான வானவேடிக்கை முழங்க அன்னை வேளாங்கண்ணி திருக்கொடி ஏற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் மாலை வேளையில் சிறப்பு ஜெபமாலை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளன. மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கும் இத்திருவிழாவில், அனைத்துச் சமூக மக்களும் ஜாதி மத வேறுபாடின்றி திரளாகக் கலந்துகொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி சப்பர பவனியும், செப்டம்பர் 7-ஆம் தேதி சமபந்தி ஆசன விருந்தும் நடைபெறவுள்ளன.
சிகர நிகழ்ச்சியான ஆடம்பர திருவிழா கூட்டுத் திருப்பலி, வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை செல்வன் பெர்னான்டோ தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்கத்தேர் கெபி கமிட்டி, வேளாங்கண்ணி மாதா அன்பியம் மற்றும் பூண்டி மாதா அன்பிய மக்கள் இணைந்து சிறப்பாகச் செய்துள்ளனர்.

