இளம் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ந.வினோத் குமார் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழரசு இதழில் வெளிவந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிந்தனைகளையும் சாதனைகளையும் முக்கிய நூலாகத் தொகுத்தவர் ந.வினோத் குமார். அவரது திராவிட இயக்க வரலாறு தொடர்பான படைப்புகள் மிகவும் முக்கியமானவை.
அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

