தூத்துக்குடி அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்கை நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள நடுக்கூட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி கல்யாணி (61). இவர்கள் கடந்த ஆகஸ்ட் 22 அன்று வீட்டின் கதவைக் காற்றுக்காகத் திறந்து வைத்துவிட்டு அனைவரும் வராண்டாயில் படுத்துத் தூங்கினர்.
நள்ளிரவில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த 4 லட்சம் மதிப்புள்ள 4 பவுன் நகையைத் திருடிச் சென்றுள்ளார். நகை திருட்டுப்போனது குறித்துக் கல்யாணிக்கு ஆகஸ்ட் 26 அன்றே தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜூடி வழக்குப் பதிவு செய்து, வீட்டிற்குள் புகுந்து திருடிய மர்ம நபரைத் தேடி வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

