தூத்துக்குடியில் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் 19-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி (ஆவணி 13) ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் சிறப்பு வருஷாபிஷேகமும், மாலை 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறவுள்ளன. காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், வேதிகார்ச்சனை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ ருத்ர ஸுக்த ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் மகாபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 9.30 மணிக்கு வருஷாபிஷேக கும்பாபிஷேகம், காலை 11.30 மணிக்கு பஞ்சமுகார்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணி: திருமுறை பாராயணம், மாலை 7.30 மணிக்கு வெள்ளி வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் அலங்கார தீபாராதனை, 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெறுகிறது.

இவ்விழா ஏற்பாடுகளைத் திருக்கோவில் அறங்காவலர் குழு, திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அம்மையப்பர் பக்த சேவா சங்கம் இணைந்து செய்து வருகின்றன.