தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது ஏன்? உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அசாம் வெள்ளப் பாதிப்பு: மருத்துவ அறக்கட்டளைகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், விஆர்எப் மற்றும் இஎல்சிஇ மருத்துவ அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் பேமிலி கேர் அமைப்பு மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணித் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.

பிரதமர் வேட்பாளர் விவகாரம்: முதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!

பிரதமர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் சந்தித்துப் பேசினார்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக புதிய திட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 9 புதிய திட்டங்களை சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார்.

உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் புகழை ஓங்கச் செய்த பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன் நன்றி!

தாஷ்கண்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பிரதமர், திருக்குறள் இன்றும் வாழ்வியலின் அனைத்துத் துறைகளுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்வதாகப் பெருமிதம் தெரிவித்தார்

சிறப்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஒரு நாள் சுற்றுலா: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருநெல்வேலியில் ஒரு நாள் சுற்றுலாவுக்கு செல்லும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பயணத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் புதிய அனல் மின் நிலையம்; முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையம் நிறுவப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறையில் நிற்க வேண்டும்: குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை!

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் குழித்துறை ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தறிகெட்டு ஓடிய பால் வேன் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் பரிதாப பலி!

வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த பால் வேன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை ரயிலில் கடத்தி வந்த 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா வாலிபர் கைது!

மேற்கு வங்கத்திலிருந்து திருநெல்வேலி வந்த ரயிலில் 9.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்காவிட்டால் த.வெ.க. ஆட்சியில் நீடிக்க மாட்டோம்: அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசப் பேச்சு!

ராகுல் காந்தியை அடுத்த பிரதமராகத் த.வெ.க. ஏற்காவிட்டால், அமைச்சரவையிலிருந்து காங்கிரஸைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் விலகுவோம் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.