இது பற்றி விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் கூறியிருப்பதாவது "ஜப்பானியக் குழந்தைகளையும், சீனக் குழந்தைகளையும் நாம் வியந்து பார்க்கிறோம். ஐரோப்பிய குழந்தைகள் வளரும் விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டால் மட்டும் போதாது.
மார்க்க விஷயங்களை போதிக்கும் நாம் நமது குழந்தைகளுக்கு பசுமை சார்ந்த, விவசாயம் சார்ந்த விஷயங்களை மூளையில் பதிய வைக்க வேண்டும். ஒட்டுமொத்த பூமியையும் அச்சுறுத்தும் பூமி வெப்பமயமாதல் அவலத்திலிருந்து அகிலத்தைக் காப்பாற்ற மரப்பெருக்கம் ஒன்றே வழி.
நிறைய மரங்கள் உருவாக விதைப்பந்துகள் வீசுதலே சிறந்த வழி என்பதனை சிறு குழந்தைகளுக்கு போதிக்க வேண்டிய தருணம் இது. . கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கும், தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், விதைப்பந்துகள் தயாரித்தலை சொல்லித் தர வேண்டும். வருங்காலத்தில் பாடத்திட்டத்தில் கூட ஆரம்பக் கல்விலேயே விதைப்பந்து விஷயத்தை சேர்க்கும் அவசியம் வரும். மண் அளையும் விஷயம் என்பதால் குழந்தைகளுக்கு விதைப்பந்து தயாரிப்பு பிடித்துப் போகிறது.
மறக்கவும் மாட்டார்கள். ஒட்டு மொத்த உலகத்திற்கே விதைப்பந்து தயாரிப்பிற்கு இந்தியா முன்னோடியாக திகழட்டும். தமிழ்நாட்டிலிருந்து விதைப்பந்துகள் தயாரித்தெறிதல் தரணி முழுக்க பரவட்டும். இவ்வாறு திருமாறன் கூறியுள்ளார்.

