கன்னியாகுமரி ராஜசங்கீதத் தெருவைச் சேர்ந்த வின்சென்ட் பெர்னாண்டோ (78), சர்ச் ரோடு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்றார். பணம் வராததால் கார்டை எடுக்க முயன்றபோது, பின்னால் நின்ற பெண் உதவுவதாகக் கூறி கார்டை எடுத்துக் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ.22 ஆயிரம் எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்தது. அவர் வைத்திருந்தது வேறொருவரின் கார்டு எனத் தெரியவந்தது. ஏ.டி.எம். ரூமில் ரகசிய எண்ணைப் பார்த்து கார்டை மாற்றி பணம் எடுத்ததாக அவர் புகார் அளித்தார். கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணைத் தேடி வருகின்றனர்.

