தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் இயங்கி வரும் முதன்மை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கனிமொழி கருணாநிதி எம்பி இன்று நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

பொதுமக்களுக்குத் தடையின்றிச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில், சுத்திகரிப்பு மையத்தின் தற்போதைய செயல்பாடுகள், நீர் சுத்திகரிக்கும் முறைகள் மற்றும் விநியோகக் கட்டமைப்பு குறித்து கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.