தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தேர்வு முகமைகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB, SSC, IBPS மற்றும் RRB, போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது IBPS RRB OFFICERS (SCALE – I, II &III) மற்றும் OFFICE ASSISTANT தேர்வுக்கு 13,745 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. OFFICERS SCALE Iக்கு முதல்நிலை தேர்வானது நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மேலும் OFFICE ASSISTANT முதல்நிலை தேர்வானது டிசம்பர் 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்கள் அறிய https://www.ibps.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

மேலும், RRB NTPC (Graduate மற்றும் Undergraduate) தேர்வுகளுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. Graduate பிரிவில் 3,548 காலிப்பணியிடங்களும், Undergraduate பிரிவில் 1,688 காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. Undergraduate பிரிவிற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 13.11.2026 ஆகும். Graduate பிரிவிற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.11.2026 ஆகும். கூடுதல் விவரங்கள் அறிய http://www.rrbapply.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

வங்கிப் பணியாளர் தேர்வு, இரயில்வே பணியாளர் தேர்வு மற்றும் SSC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 29.10.2026 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு Smart Board பயன்படுத்தி நடத்தப்படவுள்ளது. மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Thoothukudi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் 0461-2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS RRB, RRB NTPC மற்றும் SSC போன்ற மத்திய அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.