தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் ஆகியோர் "தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில்" உறுப்பினராகப் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் இந்நலவாரியத்தின் மூலம் பயனாளிகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, சிறப்புச் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், தொழிற்பயிற்சி வழங்குதல், ஓய்வூதியம், திறன் வளர்ப்புப் பயிற்சிகள் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான மானியம் போன்ற பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வட்டார வாரியாகச் சிறப்புப் பதிவு முகாம்கள்:

பயனாளிகள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய ஏதுவாக www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற தனியாத இணையதளம் செயல்பட்டு வருகிறது. இணையதளத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வாரியாகக் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

campdate.jpg

தேவைப்படும் ஆவணங்கள்:

இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைய விரும்புவோர் பின்வரும் ஆவணங்களுடன் நேரடியாகச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்:

ஆதார் அட்டை

குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)

விதவைச் சான்றிதழ் (பொருந்துபவர்களுக்கு)

புகைப்படங்கள் (Passport size photos)

கைபேசி எண் (Mobile Number)